சங்கரதாஸ் சுவாமிகள் (1867 - 1922)
சங்கரதாஸ் சுவாமிகள் (1867 - 1922)
தமிழ் நாடகக் கலையின் தந்தை என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள், கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கை, பெட்டி அரங்க மரபிற்கேற்ப மாற்றம் செய்தார். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இதில் ‘வள்ளி திருமணம்’, ‘பவளக் கொடி சரித்திரம்’, ‘வீர பாண்டிய கட்டபொம்மன்’, ‘மதுரை வீரன்’, சத்தியவான் சாவித்திரி’, ‘கோவலன் சரித்திரம்’, ‘நள தமயந்தி’, ‘இராம இராவண யுத்தம்’, ‘சித்திராங்கி விலாசம்’ போன்றவை அவருக்கு புகழ் தந்த நாடகங்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் “நாடக உலகின் இமயமலை“ என்று வர்ணிக்கப்பட்டவர்.